இன்றிலிருந்து (01) தேசிய எரிபொருள் கட்டமைப்புக்கு இணங்க QR code மூலம் எரிபொருள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (01) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.ஐ.எம்.மன்சூர், சாய்ந்தமருது பிரதேச எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், நடத்துனர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீளுள் இலாஹி, இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினுடைய உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment