வாழைச்சேனை சோமஸ்காந்தனின் ஏரிபொருள் நிலையம் QR பாஸ் நடைமுறையில் முன்னிலை



எம்.ரீ.எம்.பாரிஸ் -
தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு நடைமுறையின் கீழ் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் இலகுவாக தமக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட எரிபொருளை சிரமமின்றி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில் வாழைச்சேனை பொலீஸ் நிலைய சுற்று வட்ட சந்தியில் அமைந்துள்ள கே.ஜீ.சோமஸ்காந்தன் எரிபொருள் நிலையத்தின்னூடாக மிகச் சிறப்பான முறையில் QR பாஸ் நடை முறையினை பின்பற்றி 86.86 வீதம் என்ற அடிப்படையில் மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் வகையில் மிகச்சிறப்பான முறையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் அரசாங்கத்தின் QR பாஸ் நடைமுறைகளை பின்பற்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மக்களுக்கு சிரமமின்றி முன்னெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

QR பாஸ் திட்டத்தின் மூலம் நீண்ட வரிசைகள் மற்றும் மக்கள் கூட்டங்கள் சிரமமின்றி இலகுவாக அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் உள்ளிட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மதகுருமார்கள்,விவசாயிகள், என பல்வேறு தரப்பினர்கள் உள்ளடங்களாக அதிகமானோர் தமக்கான எரிபொருளை குறுகிய நேரத்துக்குள் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :