காரைதீவில் சுவாமி விவேகானந்தர் 125 வது ஓராண்டு தொடர் விழா !!



நூருள் ஹுதா உமர்-
ட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் எற்பாட்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் "முத்தமிழ் வித்தகர்" சுவாமி விவேகானந்தர் 125 வது ஓராண்டு தொடர் விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயம் தொடர்பாக அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கான பஜனை, வழிகாட்டுதல் தியானம், சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் போன்ற வளப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் அறிமுக உரையினை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் ஆற்றினார். இந்நிகழ்வுக்கு
கொழும்பு இராமகிருஷ்ண சாரதா மிஷன் தலைவி ப்ரவ்ராஜிக சுசாந்தப்ராண மாதாஜி மற்றும் கொழும்பு இராமகிருஷ்ண சாரதா மிஷன் செயலாளர் ப்ரவ்ராஜிக ஆத்ம தேவப்ராண மாதாஜி மற்றும் பிரமச்சாரினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவுரையினை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலைவர் வெ. ஜெயநாதன், உப செயலாளர் எஸ். விஜயரெத்தினம், அறங்காவல ஒன்றிய உப தலைவர் எஸ். தவராஜா, மற்றும் அம்பாறை மாவட்ட மஹராஜ் பிரதேச இந்து கலாசார , அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :