1497 வது மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு தாறுஸ்ஸபாவில் கொடியேற்றம்.



நூருள் ஹுதா உமர்-
முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லள்ளாஹு அலைஹி வ ஆலிஹி வ சஹ்பிஹி வசல்லம் அன்னவர்களின் 1497வது மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கல்முனை தாறுஸ்ஸபா அமைய தலைமையகத்தில் அமையத்தின் தவிசாளர் மௌலவி ஏ.ஆர். சபா முஹம்மத் (நஜாஹி) அவர்களின் தலைமையில் ஹிஜ்ரி 1444 - 2022. 09.26 அன்று புனித கொடியேற்றம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

மௌலவிமார்களின் மௌலித் முழக்கத்துடன் நிகழ்வின் பிரதம அதிதி அஸ்ஸெய்யித் மக்கத்தார் அப்துல் மஜீத் கலீபத்துல் ஹல்லாஜ் அவர்களினதும், நிகழ்வில் கலந்து கொண்ட உலமாக்கள், கல்விமான்கள், பிரதேச முக்கியஸ்தர்களினதும் பங்குபற்றலுடன் புனித கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

ஹிஜ்ரி 1444 றபீஉனில் அவ்வல் தலைப்பிறை 2022.09.27 செவ்வாய்கிழமை முதல் 2022.10.08 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக 12 நாட்கள் மௌலித் பயான் நிகழ்வுகள் இடம்பெறுவதோடு தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் நிகழ்ச்சிகளும், கல்முனை பாத்திமதுஸ் ஸஹ்றாஃ மகளிர் கல்லூரியின் நிகழ்வுகளும் இடம்பெறும்.

இறுதித் தினமான 2022.10.09 ஞாயிற்றுக்கிழமை அன்று மீலாதுன் நபி விழா மிக சிறப்பாக தாறுஸ்ஸபா தலைமையகத்தில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :