156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் நிகழ்வுகள்!


எம்.வை.அமீர்,யூ.கே.கதலித்தீன், எம்.என்.எம்.அப்ராஸ்-
நாடு பூராகவும் இன்று 156 வது பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையதின் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வின் ஆரம்பமாக போலிஸ் சேவையின் போது நாட்டுக்காக உயிர் நீத்த பொலிசார்களுக்காக இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு உலருனவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஆலோசனை சபையின் ஏற்பாட்டில்இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்ற மைமுனா அஹமட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் கல்முனை கடற்படை நிலைய பொறுப்பதிகாரி அசோக வீரசேகர, லெப்டினல் எம்.கே.இர்ஷாட் கான் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா (ரசாதி)சாய்ந்தமருது பொலிஸ் பொது மக்கள் பாதுகாப்பு ஆலோசனை குழுவின் தலைவர் முன்னாள் அதிபர் எம்.எம் இஸ்மாயில் , செயலாளர் ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.ரபீக் உட்பட உறுப்பினர்கள், சாய்ந்தமருது அல்/ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆயிசா சித்திக்கா,பொது மக்கள் பொலிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இன்று முதல் 3 ஆந் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு பூராகவும் பொலிஸ் வாரம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தெரிவித்தார்

இதன் அங்கமாக இன்று முதல் 3 ஆந் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இன்று பிற்பகல் (03) அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனை இடம்பெறவுள்ளதுடன் தொடராக வாரத்தில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மைதானத்தில் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி (பொலிஸ் அணிக்கும் - ஸாஹிறாக் கல்லூரி அணி),கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு ,சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மத்திய நிலையத்தில் இளைஞர்கள், யுவதிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்திய சேவை முகாம்,சாய்ந்தமருது கடற்கரை வீதி முழுவதும் கழகங்கள்,இளைஞர்கள்,

பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் சிரமதானம், சாய்ந்தமருது பிரதேச பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 17 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்,சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் மற்றும் மையவாடிகளை அண்மித்த வீதியோரங்களில் மரநடுகை,சாய்ந்தமருது M.S.காரியப்பர் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக, பொலிஸ் நடமாடும் சேவையும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய சேவை முகாமும் என்பன எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரசோதகர் எஸ். எல் சம்சுதீன் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :