156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
லங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் இன்று(3) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றதுடன் இவ்வுலருணவு பொருட்களை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி உள்ளிட்டோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த சாய்ந்தமருதைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்கள் கெளரவிக்கப்பட்டு, உலருனவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் பொலிஸாருக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :