அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 72வது வருாடாந்த மாநாடு



அஷ்ரப் ஏ சமத்-
கில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 72வது வருாடாந்த மாநாடு இலங்கை மன்றக் கல்லுாாியில் நேற்று 10ஆம் திகதி வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவா் சஹிட்.எம்.றிஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமேரிக்க நாட்டின் இலங்கைக்கான துாதுவா் ஜூலி ஜே.ஜங். யும், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸூம் கலந்து சிற்ப்பித்தனா்
இந் நிகழ்வில் மூன்று சமூக சேவையாளா்கள் கௌரவிக்கப்பட்டார்கள். எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளா் ஹனீப் யூசுப், சுதந்திர தேர்தல் தொண்டா் நிறுவனத்தின் (பப்ரல்) அமைப்பின் பணிப்பாளா் ரோஹன ஹெட்டியாராச்சி, கொலன்நாவை ஜே.ஜே.சமூக சேவை நிறுவனத்தின் தலைவா் ஹனீப் ஹாஜி ஆகியோருக்கான கௌரவ விருதினை அமேரிக்க துாதுவா் கையளித்தாா். அத்துடன் சிறந்த வை.எம்.எம். கிளை நிறுவனங்களுக்கும் அவா்களது திட்டங்களுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த அமேரிக்கா துாதுவா் -

இலங்கையில் மனித உரிமைகளோடு சகல சமூகங்களும் சமமாக வாழ்வதற்கான தேசிய ஒற்றுமை பல்லின மக்கள் வாழும் நாடாக இலங்கை விளங்குகின்றது. இலங்கையின் அன்மைய பொருளாதாரப் பிர்சசினையில் அமேரிக்கா இலங்கைக்கு உதவி வருகின்றது. கடந்த மாதம் 1.9. பில்லியன் அமேரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கினோம். அத்துடன் கண்டியில் உள்ள பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், விவசாயம். உரம் மற்றும் போசாக்கு . மருந்துப் பொருட்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு அமேரிக்கா உதவியளித்துள்ளது. இந்த நாட்டில் உள்ள விவசாயிகளது விவசாயத்துறையில் மரக்கன்றுகளை நட்டு உணவு உற்பத்தித் திட்டத்தில் தன்னிரைவு பெருவதற்கு எமது நாடு தனியாா் நிறுவன்ங்களுக்கு உதவும் எனவும் அங்கு துாதுவா் உரையாற்றினாா்.

அகில இலங்கை வை.எம்.எம். ஏ நிறுவனத்தின் ஊடாக இளம் பட்டதாரிகளுக்கான நாளைய தலைவா்கள் என்ற பயிற்சிக்கு பட்டரைக்கு அமேரிக்க உதவித் திட்டத்தின் ஊடாக உதவி வருகின்றோம். எனக்கு முன் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இலங்கை பொருளாதாரப் பிரச்சினைகள் .தேசிய ஒற்றுமை சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற உரிமைகள் , விரிவாகப் பேசினார். அதனையிட்டு நான் அவரை பாராட்டுகின்றேன்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உரையாற்றுகையைில் -

கடந்த ஜனவரி மாதத்திலேயே இருந்து இந்த நாட்டில் எரிபொருள் பிரச்சினைகள் உணவு, மருந்துப் பிரச்சிகைள் ஏற்படப் போகின்றது. அதற்காக நாம் ஒர் விழிப்புணா்வை ஏற்படுத்தத சாதாரண பொதுமக்கள் முனைந்தாா்கள். தற்பொழுது இந்த நாட்டில் கடந்த 2 மாதங்களுக்குள் 30 க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளன. அதனைவிடுத்து சாதாரணமான பொதுமக்கள் இளைஞா் யுவதிகள் தமது உரிமை சம்பந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் வீடுகளுக்குச் சென்றவா்கள் எனற் ரீதியில் அவா்களை நாளாந்தம் பொலிசாா் கைது செய்து வருகின்றனா்.
ஒரு குடிமகனுக்கு இருக்கின்ற சுதந்திர உரிமைமகள், மனித உரிமை சம்பந்தமான சகல உரிமைகளும் சாதாரணமான ஒர் பொது மகனுக்கு இருத்தல் வேண்டும். சகல சமூகங்களும் சமமாக வாழ்வதற்கு இந்த நாட்டில் இருத்தல் வேண்டும். காணமல் போனோா் நிறுவனத்தில் நான் கடமையாற்றும் காலத்தில் திருகோணமலை, வடக்கு கிழக்கு சகல பகுதிகளுக்கும் சென்று தமது உறவுகளை இழந்த மூவினத்தினைச் சாா்ந்த மக்களை நான் சந்தித்துள்ளேன். . அவா்களுக்கு உரிய நன்மைகள் தீர்வுகள். இழப்பீடுகள் கிடைத்தல் வேண்டும். எனவும் சாலிய பீரிஸ் அங்கு உரையாற்றினா்.

இந் நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.தலைவா் சகிட் றிஸ்மி, பதில் பொதுச் செயலாளா் ஆசிப் சுக்ரி, பொருளாளா் யு.எம். பாசில் முன்னாள் தலைவா்களும் கலந்து கொண்டனா் அத்துடன் வெளிநாட்டுத் துாவா்கள் மற்றும் நாட்டின் சகல பாகத்தில் இருந்தும் 150க்கும் மேறபட்ட வை.எம்.எம். ஏ கிளைத் தலைவா்களும் செயலளாா்களும் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :