நாட்டை விட்டு வேறு நாட்டிடம் தஞ்சம் கோரி ஒடிய முன்னாள் ஜனாதிபதி இன்று எமது நாட்டுக்கே வந்துள்ளார்!



பைஷல் இஸ்மாயில் -
லைவரை இழந்துவிட்டோம் என்ற துக்க எம்மை வாட்டி வதைத்தாலும், அவரின் அந்த இடத்தை மிக நேர்த்திய முறையில் செய்து வருகிறோம். பெருந்தேசிய கட்சிகளும் அச்சம் கொள்ளும் அளவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், தலைமையும் தனது பலத்தை நிரூபித்து வருகிறது. நாட்டை சரியான முறையில் நிர்வகிக்க முடியாமல் நாட்டை விட்டு வேறு நாட்டிடம் தஞ்சம் கோரி ஒடிய முன்னாள் ஜனாதிபதி இன்று எமது நாட்டுக்கே வந்துள்ளார். அந்தளவு பல அவமானங்களைச் சந்தித்த ஜனாதிபதியாகவும் அவர் இருந்துள்ளார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி ஹெலிஹொப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் 22 வது
வருட நினைவு தின நிகழ்வும், விஷேட துஆப் பிரார்த்தனையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரால் இன்று (16) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் இருந்த காலப்பகுதியில் அட்டாளைச்சேனைக்கு எந்த விதமான அரசியல் தலைமையும் கிடைக்கவில்லை. நான் இருந்த காலப்பகுதியிலேயே பிரதேச சபை தவிசாளர் என்றும், மாகாண சபை உறுப்பினர் என்றும், மாகாண அமைச்சர் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற பல பதவிகளை வழங்கியுள்ளேன்.

முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் பேரியக்கம் உருவாக்கப்பட முன்பு
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒற்றுமையின்றி பிரதேசவாதம் தலைதூக்கி இருந்தது. எதற்கெடுத்தாலும் பிரதேசத்தினை மையமாக கொண்ட அரசியல் கலாசாரம் அன்று இருந்தது. இவ்வாறு பிரதேச ரீதியாக பிளவுபட்டுக் கிடந்த முஸ்லிம் மக்களை ஒன்றிணைப்பது சிரமமான விடயமாகக் காணப்பட்டது. அப்போதுதான் மு.கா என்ற பேரியக்கம்
ஆரம்பமானது. மு.கா.வின் வரலாறையும், வந்த தடத்தையும் தடயங்களையும் முற்றாக அழிப்பதென்ற பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலைத் தகர்த்தெறிந்து மீட்பதென்பது இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பெரும் சவாலாக மாறி வருகிறது.

மர்ஹூம் அஷ்ரப் மூவின சமூகத் தலைவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணினார். பெரும்பான்மைக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியின் பங்காளியாக கொண்டு தேசியக் கட்சிகள் ஆட்சி நடத்தின. இவ்வாறு ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், முஸ்லிம்களின் முகவரிக் கட்சியை மாற்றியமைத்த ஒருவர்
மர்ஹும் அஷ்ரபாகும் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் ஸ்தாபக செயலாளரும், பிரதித் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர் யூ.எல்.ஏ.வாஹிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :