பல்லின கலாச்சார நிகழ்வுகளுடன் அம்பாரை அரசாங்க அதிபரினால் இறக்காமம் கலாச்சார மத்திய நிலையம் திறந்துவைப்பு



நூருல் ஹுதா உமர்-
லாச்சார அமைச்சின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இறக்காமம் கலாச்சார மத்திய நிலையத்தின் திறப்பு விழா இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் புதன்கிழமை விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்லஸ் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜகதீசன், பிரதம கணக்காளர் ஏ.எல். ஆதம்பாவா, மாவட்ட பொறியியலாளர் எம்.ஐ. றாசிக் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர், முன்னாள் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினர்களுமான ஜே.கே. றஹ்மான், எம்.ஐ. நைசர், உறுப்பினர் .எம். ஆசிக் முன்னாள் தவிசாளர் யூ.கே. ஜபீர் (மௌலவி) ஆகியோர் வருகைதந்தனர்.

இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜமீல், தலைமைப்பிட்ட சமுர்த்தி முகாமையாளர் எம்.சி. தஸ்லீம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் (மத்திய அமைச்சு) டீ.எம். றிம்ஷான், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் (மாகாண அமைச்சு) ஏ.எல். தௌபீக், பிரதேச கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் எஸ்.எல். நிசார், பொருளாளர் யூ.எல். ஜிப்ரி, கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல். மஹ்மூட் லெப்பை, வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். ஹாமிது லெப்பை (மதனி), அஷ்ரப் தேசிய பாடசாலை பிரதி அதிபர் ஏ.எம். இர்பானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கலாச்சார மத்திய நிலைய திறப்பு விழா நிகழ்வில், பிரதேச செயலாளரினால் அரசாங்க அதிபர் கௌரவிக்கப்பட்டதுடன் கலாச்சார அதிகார சபையினால் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். சர்வ மத பிரார்த்தனைகள், பிரதேச கலை கலாச்சார பாரம்பரியத்தை எடுத்தியம்பும் கலாச்சார நிகழ்வுகள், மேலும் மூத்த கலைஞர்களின் பாடல்கள், ஓரங்க நாடகம் என்பன இடம்பெற்றதுடன் இஸ்லாமிய கலாச்சார மரபுரிமை அமைப்பின் சீனடி, வாள் வீச்சு, சிலம்பாட்டம், தற்காப்பு நிகழ்ச்சிகள், அல் ஹிலால் அஹதியா பாடசாலை மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள், அஷ்ரப் தேசிய பாடசாலை மாணர்களின் கலைப் படைப்புக்கள், அமீரலிபுரம் வித்தியாலய மாணவர்களின் முஸ்லிம் பாரம்பரிய பொல்லடி கோலாட்டம், ரித்ம நடனக் குழுவின் நடன நிகழ்ச்சிகள், அஸ்-ஸபா வித்தியாலய மாணவர்களின் பேண்ட் வாத்திய குழுவின் இசை என பல்வேறு கலை நிகச்சிகள் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :