மையவாடி அமைய வேண்டிய இடத்தில் மடுவமா? வொலிவேரியன் மக்களுக்கு துரோகம் செய்யாதீர். கலைஞர் அன்ஸார் ஆவேசம்!


வொலிவோரியன் கிராமத்தில் மையவாடி அமைக்கப்பட வேண்டியது அவசியமான தேவை ஆகும் என்று லக்‌ஸ்டோ மீடியா ஊடக வலையமைப்பின் தலைவரும், ஏ. எஸ். எம். சம்சுதீன் ஆலிம் கலை, கலாசார, ஊடக , சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் செயலாளருமான அஹமட் லெப்பை அன்ஸார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்கள் ஆழி பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இக்கிராமத்தில் மையவாடி கிடையாது. இதனால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு தூர இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது.
எனவே இக்கிராமத்தில் மையவாடி அமைய பெற வேண்டியது அவசியமான தேவை ஆகும். இத்தேவை உணரப்பட்டு இங்கு உள்ள புத்திஜீவிகள், இளையோர்கள், பள்ளிவாசல்களின் செயற்பாட்டாளர்கள் போன்றோர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பிரதேச செயலாளராக இருந்த சலீம் மையவாடிக்கென இடம் ஒன்றை ஒதுக்கினார். என்றும் குறிப்பிட்டார்.

லக்‌ஸ்டோ மீடியா ஊடக வலையமைப்பின் தலைவரும், ஏ. எஸ். எம். சம்சுதீன் ஆலிம் கலை, கலாசார, ஊடக , சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் செயலாளருமான அஹமட் லெப்பை அன்ஸாருடைய கலை துறை பயணத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இரு அமைப்புகளினதும் ஏற்பாட்டில் கல்முனை மாநகரை பசுமையாக்குவோம் என்கிற வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு அமைய வொலிவேரியன் கிராமத்தில் உள்ள கதீஜா கிண்டர்கார்ட்டன் முன்பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை மர நடுகை மேற்கொள்ளப்பட்டு சங்கங்கள். பொது அமைப்புகள் அடங்கலாக 400 பயனாளிகளுக்கு மர கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இவ்வைபவத்தை தலைமை தாங்கி நடத்தியபோது அன்ஸார் மேலும் தெரிவித்தவை வருமாறு

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்கள் ஆழி பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இக்கிராமத்தில் மையவாடி கிடையாது. இதனால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு தூர இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது.

எனவே இக்கிராமத்தில் மையவாடி அமைய பெற வேண்டியது அவசியமான தேவை ஆகும். இத்தேவை உணரப்பட்டு இங்கு உள்ள புத்திஜீவிகள், இளையோர்கள், பள்ளிவாசல்களின் செயற்பாட்டாளர்கள் போன்றோர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பிரதேச செயலாளராக இருந்த சலீம் மையவாடிக்கென இடம் ஒன்றை ஒதுக்கினார்.

மைதானத்துக்கு பின்னால் இந்த இடம் இருக்கின்றது. ஆனால் இந்த இடத்தில் மையவாடிக்கு பதிலாக மடுவம் ஒன்றை கொண்டு வருவதற்கு கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருதை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் முயற்சிப்பதாக அறிகின்றோம்.

மாநகர சபையில் அதற்கான பிரேரணையை அவர்கள் முன்வைத்து இருப்பதாகவும் அறிய கிடைக்கின்றது. அத்தகவல் உண்மையாக இருக்கின்ற பட்சத்தில் வொலிவேரியன் கிராம மக்களுக்கு அவ்வுறுப்பின்ர்கள் செய்கின்ற பாரிய துரோகமாக இருக்கும்.

மையவாடியை அந்த இடத்தில் அமைத்து தர வேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்தி சாய்ந்தமருது பிரதேச செயலாளர், கல்முனை மாநகர முதல்வர், பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியோருக்கு முறையிட நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதற்காக இப்பிரதேச மக்கள், பொது அமைப்புகள் ஆகியோரின் கையொப்பங்களை திரட்டி உள்ளோம். என்றும் தெரிவித்தார். நிகழ்வின் இறுதியில் குறித்த கிராமத்துடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் இணைந்து பிரதேச செயலகம் சென்று மகஜர்களையும் கையளித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :