வி.ரி. சகாதேவராஜா-
இலங்கையில் இன்று மூவின மக்களுக்கும் எதிராக பாய்ந்திருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் மாத்திரமே இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அம்பாறை மத்திய முகாமில் நடைபெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டையில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
இந்த பயங்கரவாத தடைச் சட்டம் அன்று தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அரசினால் அராஜகமாக கொண்டுவரப்பட்டது. இன்று அதே சட்டம் ஏனைய முஸ்லிம் சிங்கள மக்கள் மீதும் பாய்கின்றது. இந்த சட்டத்தினால் மனித உரிமை மீறப்பட்டிருக்கின்றது இனப்படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவேதான் இப்படிப்பட்ட கொடுமையான சட்டத்தை நீக்கும்படி கோரி இந்த கையெழுத்து வேட்டையை நாம் ஆரம்பித்து இருக்கின்றோம்.
இந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கினால் மாத்திரமே இலங்கையில் மனித உரிமை பாதுகாக்கப்படும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வேட்டையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
0 comments :
Post a Comment