அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இடையே கலந்துரையாடல்



ட மாகாணத்தில் கமத்தொழில், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று கமத்தொழில் வன ஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்றது.

இதன்போது வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற வாழ்வாதார காணிகள், வதிவிடக் காணிகள், விவசாய செய்கை, மேய்ச்சல் தரைகள், சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் விவசாய அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் வனவளத்துறையின் ஆளுகைக்குள் இருக்கின்ற விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சாதகமான முடிவுகளும் எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தா, வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :