மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றி வரும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று (30) ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ், தியாகி அரக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேன் தியாகேந்திரனிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.
கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் கே.சுகுணன், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி லசந்த பண்டார, பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது சமூகப்பணியாற்றி வரும் சமூக செயற்பாட்டாளர்களும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் இத்திட்டத்தில் இன்று 15 பேருக்கு நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 45 ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment