இஹ்ஷான் லெஜன்ட்ஸ் வெற்றிக்கிண்ணம் பதுறியா-மாஞ்சோலை அல்-இஹ்ஷான் விளையாட்டுக் கழகத்தின் வசமானது



அஸ்ஹர் இப்றாஹிம்-
துறியா-மாஞ்சோலை அல்-இஹ்ஷான் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மூத்த வீரர்களுக்கான இஹ்ஷான் லெஜன்ட்ஸ் வெற்றிக்கிண்ண கிறிக்கட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி அண்மையில் மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் கல்குடாப் பிரதேசத்தைச் சேர்த்த பதிவு செய்யப்பட்ட முன்னணி விளையாட்டுக் கழகங்களிலிருந்து 35 வயதிற்கு மேற்பட்ட மூத்த வீரர்கள் பங்கேற்றனர்.

நொக்அவுட் முறையில் இடம்பெற்ற இக்கி றிக்கட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிக்கு அல் இஹ்ஷான் லெஜன்ட்ஸ் மற்றும் வளர்பிறை லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழக அணியினர் தெரிவாகி இருந்தனர்.

இவ் இறுதிப்போட்டியில் அல் இஹ்ஷான் லெஜன்ட்ஸ் அணியினர் வளர்பிறை லெஜன்ட் அணியினரை வெற்றி கொண்டு சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டு இஹ்ஷான் லெஜன்ட்ஸ் வெற்றிக் கிண்ணத்தை தம்வசமாக்கிக் கொனடனர்.
இரண்டாமிடத்தினை வளர்பிறை லெஜன்ட் அணியினர் பெற்றுக் கொண்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அல் இஹ்ஷான் லெஜண்ட்ஸ் அணியினர் முதலில் துடுப்பாடத் தீர்மானித்து ஆறு ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இதில் அல் இஹ்ஷான் லெஜண்ட்ஸ் அணியைச் சேர்ந்த இஸ்ஸதீன் 18 ஓட்டங்களையும் , அமீர் 16 ஓட்டங்களையும் றபாய்தீன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வளர்பிறை லெஜண்ட்ஸ் அணியினர் 6 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
10 மேலதிக ஓட்டங்களால் அல் இஹ்ஷான் லெஜண்ட்ஸ் அணியினர் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
அல் இஹ்ஷான் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் றிபாஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இஹ்ஷான் லெஜன்ட்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நெளபர் கலந்து கொண்டார்,
இறுதி நிகழ்வில் மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலய அதிபரும் வளர்பிறை விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகருமான எம்.ஏ.சீ.ஜிப்ரி, அல்-இஹ்ஷான் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான எம்.என்.எம்.சாஜஹான், வளர்பிறையின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட வீரருமான எம்.காதர், ஓட்டமாவடி ஐஸு டெக்ஸ் உரிமையாளர் ஏ.எஸ்.அறபாத், ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகத்தலைவர் எம்.எம்.ஜெஸ்லின், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் சமூகச்செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.ஹலால்தீன், மாஞ்சோலை ஹிழ்ரியா ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் வீ.ரீ.பதுர்தீன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :