பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பிரதேச மக்களின் ஜீவனோபாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்த நிலையில் மேட்டுநில பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை , சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் வறுமையான நிலையில் வாழும் பொத்துவில் , கோமாரி , தாண்டியடி , காஞ்சிரங்குடா ,செங்காமம், சங்கமான் கண்டி , உமிரி , ஊரணி, ஹிஜ்ரா நகர், செங்காமம் , லாஹுகல , பாணம மற்றும் இன்ஸ்பெக்டர் ஏற்றம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ்,முஸ்லிம், சிங்கள குடும்பங்களை சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சி காரணமாக புல் , பூண்டுகள், செடிகள் மற்றும் பயிர்கள் வாடி வதங்கி காடப்படுவதுடன் புற்தரைகள் வரண்டுள்ளதால் கால்நடைகள் உண்ண உணவின்றியும் குடி நீருக்காக அலைந்து திரியும் நிலையும் தோன்றியுள்ளது.
இப்பிரதேசத்திலுள்ள ஆறு , குளம் , குட்டைகள் , நீரோடை மற்றும் கிணறுகள் வெற்றிக் காணப்படுவதால்
இப்பிரதேச மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே அதனை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :