ஏறாவூர் வைத்தியசாலை ஓ.பி.டி இல் இனி பேப்பர் இல்லை!


ஏறாவூர் சாதிக் அகமட்-
வைத்தியசாலை நடவடிக்கைகளை கணணி மயப்படுத்தும் Digital Hospital Project இன் கீழ் சுகாதார அமைச்சும் ICTA நிறுவனமும் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஆதார வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளை முதல்கட்டமாக கணணிமயப்படுத்தி வைத்தியபிரிவு, ஆய்வுகூடம், ECG, Injection Room, பார்மசி போன்றவற்றை இணைத்து கணணி மூலமான பதிவுகளை மேற்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு

கடந்த வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தயாளினி சசிக்குமார் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களும் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .என் .மயூரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.

அத்தோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :