அகவை அறுபது காணும் சேவை நாயகன் சண்முகநாதன் சுதாகரன்



எப்.முபாரக்-
ண்முகநாதன் சுதாகரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், விஞ்ஞானம் திருமலை வலையம்)01/10/1962 அன்று சண்முகநாதன், பவளரத்தினம் தம்பதியினருக்கு ஓர் ஆண் சகோதரனுக்கும் மூன்று பெண் சகோதரிகளுக்கும் இளையவனாக உரும்பிராய் யாழ்பாணத்தில் பிறந்து, பன்குளம் ஒளவை நகர் அரசினர் வித்தியாலம் திருகோணமலையில் ஆரம்பக்கல்வியைப் பயின்று, இந்துக்கல்லுரி திருகோணமலை இல் இடைநிலை, உயர் கல்வியைக் கற்று யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் 1984 இல் பௌதிக விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறினர்.

பட்டம் பெற்ற அன்றிலிருந்து தனது சேவையை ஆரம்பிக்கும் நிமித்தம் தி/ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரி, தி/புனித சூசையப்பர் கல்லூரி ஆகிய இரண்டிலும் பகுதி நேர பௌதிகவியல் ஆசிரியராக கடமையாற்றி 05/08/1984 இல் தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அரச நியமனம் பெற்று அன்றிலிருந்து ஆசிரியராகவும், பகுதித்தலைவராகவும், உதவி அதிபர் எனும் பல பரிமாணங்களில் எங்களது சமூகத்திற்கான கடமைகளை நேர்த்தியாகச் செய்ததிற்கு அமைய 07/07/2005 இல் உதவிக்கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம் திருமலை வலயம்) எனும் அந்தஸ்த்து கிடைத்ததற்;கு அமைய இன்றுவரை நேர்கொண்ட பார்வையுடன் உதவிக் கல்விப்பணிப்பாளராக இருந்தும் ஆசிரியர் எனும் பொறுப்பை என்றும் கைநழுவ விடாமல் விஞ்ஞான கல்வித் தரவட்டத்தை ஸ்தாபித்து சக ஆசிரியர்களை ஒரு குடைக்குள் கொண்டுவந்து கல்வி சமூகத்திற்கு 1993 இலிருந்து பௌதிகப்பாட விடைத்தாள் மதிப்பீட்டு அனுபவத்துடன் சொல்லில் அடங்காத பல சேவைகளை
ஆற்றிய நாயகனுக்கு அகவை அறுபதை வாழ்த்தி நிற்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :