குடைச்சாமி சித்தரின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை. இலங்கையில் முதலாவது சிலை காரைதீவில்.



காரைதீவு சகா-
கிழங்கையின் புகழ் பூத்த சித்தராக விளங்கிய குடைச்சாமி சித்தரின் திருவுருவச்சிலை நேற்றுமுன்தினம் (10) சனிக்கிழமை காரைதீவு சிவசக்தி குரு குடைச்சாமி சித்தரின் சர்வ மத பீடத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

அந்த பீடத்தின் பொறுப்பாளர் சுவாமி ஜீவாகரன் தலைமையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ண வாசுதேவ சர்மா தலைமையில், உதவிக்குரு தங்கராஜா விந்தியன் உதவியுடன் யாகம் அபிஷேகம் கிரியைகள் இடம்பெற்றன.
இந்து சமய ஆர்வலர்களான தவிசாளரும் தர்மகத்தாவுமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இந்து சமய விருத்தி சங்க முன்னாள் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மேலும் உள்ளூர் வெளியூர் சித்தர் அடியார்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் குடைச்சாமி சித்தரின் முதலாவது திருவுருவச் சிலை காரைதீவில் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குடைச்சாமி சித்தர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று மக்களுடன் வாழ்ந்து அருள் ஆசி வழங்கியவுடன் மக்களின் துன்பங்களையும் தீர்த்து தனது சித்துக்களை மேற்கொண்டவர். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல வித்தைகளை கற்று பல விசேட நன்மைகளை மக்களுக்கு உணர்வுடன் செயல்படுத்தியவர்.
குடைச்சாமி சித்தரின் பிரதான சீடரான சுவாமி ஜீவாகரன் காரைதீவு.08 கடற்கரை வீதியில் சிவசக்தி குரு குடைச்சாமி சித்தரின் சர்வமத பீடத்தை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடாத்தி வருகிறாரர்.
அவரின் குரு பக்தியின் வெளிப்பாடாக இந்த திருவுருவச் சிலை இந்திய சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டு நேற்று முன்தினம் யாகம் அபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது .

சமாதி அடைந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் சித்தருள் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆகியோரின் சிலைகள் ஏலவே காரைதீவில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் குடைச்சாமி சித்தரின் திருவருட்சிலை காரைதீவில் பிரதிஷ்டை செய்யப்படுவது சிறப்புக்குரியது.

பிரதிஷ்டை செய்த இருதினங்களும் பிரபல சமூக செயற்பாட்டாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களின் அன்னதானம் இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :