பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண நிதி விநியோகம்



நூருள் ஹுதா உமர்-
ல்முனை பிராந்தியத்தினை மையப்படுத்தியதாக பல்வேறுபட்ட வாழ்வாதார மேம்பாட்டு நல திட்டங்களையும், நிவாரண விநியோகங்களையும் கல்முனையன்ஸ் போரம் முன்னெடுத்துவருகின்றது.

அந்தவகையில் நாட்டில் நிலவிவருகிற பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரம் முடக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுக்கான நிவாரண நிதி விநியோகிக்கும் செயற்றிட்டம் ஒன்றினை கல்முனையன்ஸ் போரம் நேற்று வெள்ளிக்கிழமை (02) நடைமுறைப்படுத்தியது.

மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, இஸ்லாமபாத் மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களிலிருந்து பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு தலா ரூபா 20,000 நிதி நிவாரணம் இந்த நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தலைமை தாங்குகிற குடும்பங்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :