நாடு பொருளாதார நெருக்கடியில்.தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ச குடும்பத்தின் பிணைக் கைதி.-எதிர்க்கட்சித் தலைவர்


ந்நாட்டு மக்கள் மனதில் பொது மக்கள் போராட்டமொன்று எழுந்தது மக்களை ஒடுக்கும் அரசை விரட்டியடித்து விட்டு ஜனநாயக அரசை ஸ்தாபிப்பதாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரக் கொலையாளியான பிரிவினர்களின் தயவில் அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்துள்ளனர் எனவும், அவர் கூட தற்போது ராஜபக்ச குடும்பத்தின் பிணைக்கைதியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (15) அம்பாறையில் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தை தாக்கி பிரதமர் பதவி விலகியதாகவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூட தேர்தல் காலத்தில் தாக்குதல்களையும் வன்முறைகளையுமே அவர்கள் மேற்கொண்டதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐ.தே.க கார்களைத் தாக்கியவர்களுக்கும் ஐ.தே.க உறுப்பினர்களைக் கொன்றவர்களுக்கும் கூட தற்போதைய ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அம்பாறை மக்கள் சிறந்த முறையில் விவசாயம் செய்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் எனவும், அவர்கள் யாருடைய அடிமைகளோ அல்லது கைதிகளோ அல்லனர் என்றாலும், அன்று சிறந்து விளங்கிய நாட்டின் விவசாயிகள், மீனவர்கள்,கூலித்தொழிலாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,அங்கவீன குடும்பங்கள்,பாடசாலை சிறுவர்கள் என அனைவரும் இன்று உதவியற்ற நிலையில் உள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் திரிபோஷா கூட கொடுக்க முடியாத இந்த அரசாங்கம் இந்நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நெல்லுக்கு நல்ல விலை கிடைப்பதாகவில்லை எனவும், உர மானியம் கிடைப்பதில்லை எனவும், குழந்தைகளுக்கு பால் மா இல்லை என்றும், மண்ணெண்ணெய்யோ அல்லது பிற எரிபொருள்களோ இல்லாத நிலையில்,மொட்டு அரசாங்கம் தமக்கு நெருக்கமாக செயற்படும் பிரிவினர்களுக்கிடையே அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கொன்று குவித்த ராஜபக்சர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்காவிட்டாலும் அவர்களுடன் நட்புறவு கொண்டாடும் பிரிவினர்களூடாக அமைச்சுப் பதவிகளை பெற்று ராஜபக்சர்கள் விரும்பியவாறு நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 இலட்சமும்,
காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 இலட்சமும் என நட்ட ஈடு வழங்கப்பட்டாலும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு கோடிக்கணக்கு எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஈஸ்டர் தாக்குதலில் எங்களுடைய சொந்த மக்களே கொல்லப்பட்டாலும் சுகபோகம் அனுபவிப்பது அமைச்சர்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலவரங்களை உருவாக்க மக்கள் வீதியில் இறங்கவில்லை என்றும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இதுவல்லவெனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், புதிய தேர்தல் மூலமே அந்த மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும்,அதற்காக அனைவரும் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை தேர்தல் தொகுதியின் பிரதான அலுவலக திறப்பு விழாவும் தேர்தல் தொகுதிக் கூட்டமும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று(15) நடைபெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :