கல்முனையில் சட்டவிரோத அங்காடி வியாபாரத் தலங்களை அகற்ற நடவடிக்கை



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டவிரோத அங்காடி வியாபாரத் தலங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக மாநகர சபையின் வருமான பரிசோதகர்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான வீதிகளிலும் உள்ளூர் வீதிகளிலும் சட்டவிரோதமாக பலகை, மேசை மற்றும் கொட்டகை அமைத்து மீன், மரக்கறி, பழ வகைகள், இளநீர் மற்றும் இதர பொருட்களின் வியாபார நடவடிக்கைகளினால் வாகனப் போக்குவரத்துகளுக்கும் பாதசாரிகளுக்கும் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

ஆகையினால் சம்மந்தப்பட்டவர்கள், இச்சட்டவிரோத அங்காடி வியாபாரங்களில் இருந்து உடனடியாக தவிர்ந்து கொள்வதுடன் தமது வியாபாரத் தலங்களை அகற்றிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வறிவுறுத்தலை மீறி வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தளபாடங்கள் மற்றும் பொருட்கள் கையகப்படுத்தப்படும் என்பதுடன் சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதியோரங்களிலும் நடைபாதைகளிலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்கள் தாங்கிய விளம்பரப் பலகைகளும் பொருட்களும் காட்சிப்படுத்தப்படுவதால் பாதசாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துக் காணப்படுவதால், குறித்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் றகீப் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :