பயங்கரவாத தடைச் சட்டம் ஈழத்தமிழரின் வாழ்வியலை சீரழித்தது! மத்திய முகாமில் தவிசாளர் ஜெயசிறில் சீற்றம்.



வி.ரி.சகாதேவராஜா-
லங்கையில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலை முற்றாக சீரழித்தது. இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறையில் வாட காரணமாக இருந்தது. இன்று அச்சட்டம் மூவின மக்கள் மீதும் பாய்ந்திருப்பது விசித்திரமானது அல்ல.

இவ்வாறு அம்பாறை மத்திய முகாம் பகுதியில் தமிழரசு கட்சியால் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சீற்றத்துடன் கூறினார்.

தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் அவர் கூறுகையில்.

தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலிக்கின்ற தமிழரசுக் கட்சியானது 25 மாவட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டையை நடத்தி வருகின்றது. 1979 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தச் சட்டத்தினால் தமிழ் இளைஞர்கள் தமிழினம் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இதனால் வடகிழக்கு தாயக மண்ணிலே எமது தமிழ் மக்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டார்கள்.வாழ்வியல் சின்னாபின்னமாகியது.

அன்று தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த பயங்கரவாததடை சட்டம் இன்று முஸ்லிம் இளைஞர்கள் நாட்டில் இருந்த அராஜக அரசியலை விரட்டி அடித்த அறகல போராட்டக்காரர்கள் மீதும் பாய்ந்து இருக்கின்றது.
அதற்காகத்தான் மூவின மக்களும் சேர்ந்து இப் பொல்லாத சட்டத்தை நீக்கும்படி கோரி இந்த கையெழுத்து வேட்டையை நாடுபூராக நடாத்தி வருகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய மக்களை வேதனைப்படுத்தி தமிழ் மக்களுக்கு சுதந்திரம் வேண்டும்என்று ஒருபோதும் கேட்கவில்லை .

ஏனைய மக்கள் அனுபவிக்கின்ற உரிமை சுதந்திரம் போன்றவற்றை எமது தமிழ் மக்களுக்கும் தாருங்கள் என்றுதான் கேட்கின்றோம். இல்லாததை கேட்கவில்லை. நாம் எமது உரிமைகளைத்தான் கேட்கின்றோம்.
நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல.

எமது பயணம் தேச விடுதலைக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக நடைபெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :