கடல் வளத்தை பேணும் விழிப்புணர்வு நோக்கில் சைக்கிள் சவாரியில் பயணித்த மட்டக்களப்பு இளைஞர்கள் இருவருக்கும் வரவேற்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
Ocean ride என்ற கருப்பொருளில் இலங்கையின் கரையோரம் வழியாக கடல் வளத்தை பேணுவோம் எனும் தொனிப்பொருளில் 11 நாட்களில் 1300 தூரத்தை சைக்கிளில் பயணித்த பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , களுவாஞ்சிகுடி பழைய மாணவன் அனாமிகன் குமாரசிங்கம் மற்றும் அவரது நண்பன் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவர் சஞ்ஜீவன் அமலநாதன் ஆகிய இருவரும் மட்டக்களப்பை வந்தடைந்தும் Ocean Biome மற்றும் இயற்கை மொழி அமைப்பினர் இணைந்து இருவரையும் வரவேற்று கௌரவித்தனர்.

இந்த இரு இளைஞர்களும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்து இலங்கையின் கரையோர பிரதேசங்களான திருகோணமலை , யாழ்ப்பாணம் , புத்தளம் , நீர்கொழும்பு , ஹிக்கடுவ , காலி , மாத்தறை , ஹம்பாந்தோட்டை , பொத்துவில் வழியாக மட்டக்களப்பை வந்தடைந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :