கஹோட்டவிட்ட முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் நீண்ட கால தேவையை பல கோடி ரூபாய்களில் பூர்த்திசெய்த ஏ.ரீ.ஜி நிறுவனத்தின் அதிபதி அல்ஹாஜ் பஸால் ஆப்தீன்


அஷ்ரப் ஏ சமத்-
ஹோட்டவிட்ட முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் நீண்ட கால கனவாக இருந்த 3 மாடிக் கட்டிடம் நேற்று முன்தினம் (13) செப்டம்பா் 2022. நனவாகியது. இக்கடடிடத் தொகுதி திறப்பு விழா கல்லுாாியின் அதிபா் எம்.எம்.எம். சர்ஜூன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக நன்கொடையாளா் அல்ஹாஜ் பசால் ஆப்தீன், கலந்து கொண்டாா். அத்துடன் கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளா் அனுர பிரேமலால், கம்பஹா மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளா் தமிழ் மொழி எம்.ரீ.எம். தௌபீக், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளா் ஏ.ஏ.எம். சிறாஸ் உட்பட ஊர் பிரமுகா்கள் பழைய மாணவ மாணவிகள் அருகில் உள்ள பாடசாலைகளின அதிபா்களும் கலந்து சிறப்பித்தனா்.

இங்கு உரையாற்றிய அதிபா்

ஏ.ரீ.ஜி நிறுவனத்தின் அதிபதி அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் அவா்களிடம் பாடசாலையின் அதிபா். மற்றும் நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று இப்பாடசாலையை அவா் தனது பாடசாலையாக நினைத்து 3 மாடிகளைக் கொண்ட கட்டிடதொகுதியை நிர்மாணித்து திறந்து வைத்துள்ளாா். இக் கட்டிடத் தொகுதியில் வகுப்பறைகள், கூட்ட மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம், மலசலத் தொகுதி , கூடை வலைப்பந்தாட்டத் தொகுதி என்பனவும் பல கோடி ருபாய்க்களை செலவு செயது தனது சொந்த நிதியினைச் செலவளித்து இத் திட்டத்தினை இக் கல்லுாாிக்கு நிர்மாணித்துக கொடுத்துள்ளாா்.
இக்கால கட்டத்தில் கட்டிடப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் தட்டுப்பாடுகள் நிலவிய இக் காலகட்டத்தில் ஆனால் இத் தனவந்தா் தாமகவே முன்வந்து இப் பாடசாலையில் மாணவிகள் எதிா்நோக்கும் இடப்பற்றாக்குறைகள் வகுப்பறைகள் மற்றும் பௌதீக பற்றாக்குறையை நேரில் அவதானித்து இத் திட்டத்தினை இப்பாடாசலைக்கு நிவா்த்திசெய்துள்ளாா். இதனை முன்னிட்டு இப்பிரதேச பள்ளிவாசல் நிர்வாகம், பாடசாலையின் பெற்றாா் அதிபா்கள் இணைந்து அல்ஹாஜ பசாஸ் ஆப்தீனை கொளரவித்தனா்.

அத்துடன் இக் கல்லுாாி மாணவிகள் உயா் தரம் சித்தியடைந்து இம்முறை பல்கலைக்கழகம்,புகும் மாணவிகள் சாதாரண தரம் மற்றும் ,புலமைப்பரிசில் ,சித்தியடைந்த மாணவிகளுக்கான கௌரவிப்பும் இவ் விழாவில் நடைபெற்றது.அத்துடன் விசேட மலா் ஒன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் மேடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :