சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் AWFநிறுவனத்தின் அனுசரணையுடன் "ஒன்றாக நடுவோம்" - நாட்டை வெல்வோம்" உணவுப் பயிர்உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச மக்களின் உணவுப் பாதுகாப்பைஉறுதி செய்யும் நோக்கில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களிடையே வீட்டுத் தோட்ட பயிற்ச்செய்கையை மேம்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வும்,தெரிவுசெய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு பயிர் விதைகள் மற்றும் 10,000 பெறுமதியான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனீபா தலைமையில் நேற்று (28) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் அவர்கள்கலந்து கொண்டதோடு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம், கணக்காளர் ஐ.எம்பாரிஸ்,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம். சலீம் ,Diamond rainwear (pvt) Ltd நிறுவனத்தின்செயலாளர் எஸ்.எம் .நபீர் ,AWFநிறுவனத்தின் இணைப்பாளர் வாணி ,சைமன் மற்றும் Islamic Relief நிறுவனத்தின் இனைப்பாளர் திருமதி் சுஹிர்தனி , விவசாய போதனாசிரியர் திருமதி பஸ்லுனா,சமூகசேவைஉத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை பிரிவின் ஏனையஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment