கிழக்கு மாகாணத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தவர் துவாரகேஷ். அம்பாறை மாவட்ட பிரமுகர்கள் பாராட்டு.



காரைதீவு சகா-
கிழக்கு மாகாணத்தை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வைத்தவர் கல்வி சாதனையாளர் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்கள். அவரை பிறந்த மாவட்டம் சார்பில் பாராட்டுகிறோம் என்று நேற்று அங்கு சென்ற
அம்பாறை மாவட்ட பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து முதல் முதலாக அரசியல் பிரமுகர்கள் அடங்கிய குழுவொன்று மட்டக்களப்புக்கு சென்று அவரது வீட்டில் பாராட்டி கௌரவித்தது.

கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான சந்திரசேகரன் ராஜன் ,வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று அவரைப்பாராட்டி கௌரவித்தனர். அவர்களுடன் காரைதீவை சேர்ந்த கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சமுமளித்திருந்தார்.

உறுப்பினர் ராஜன் அங்கு பாராட்டி பேசுகையில்...
இது ஒரு இமாலய சாதனை .வரலாற்று பதிவு .அம்பாறை மாவட்டத்திற்கு குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த முன்னொரு போது மில்லாத மாபெரும் கல்வி சாதனை இது. துவாரகேசை பாராட்டுவதில் நாங்கள் அனைவரும் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.. என்றார்.

கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா கூறுகையில்..
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண்ணில் தோன்றிய தமிழ்வண்ணன் துவாரகேஷ் உலகத்தை மீண்டும் காரைதீவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்றார். அவரது உன்னதமான சாதனையால் முழு தமிழ் பேசும் சமுகமும் பெருமையடைகிறது. காரைதீவைச் சேர்ந்த நல்லரெத்தினம் பண்டிதரின் மகன் தோல் வைத்திய நிபுணர் டாக்டர் தமிழ்வண்ணன் , துவாரகேஷ்ஷின் தந்தை. காரைதீவிவை சேர்ந்த பொறியியலாளர் திருச்செந்தில்வேலின் மகள் வைத்திய அதிகாரி டாக்டர் பகீரதி, துவாரகேஷின் தாய்.
இவரது அதிஉயர் சாதனையால் கிழக்கில் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மீண்டும் கல்வியியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :