சாதித்த மாணவிகளை சந்தித்தார் கல்லூரி அதிபர்!



காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலையில் இம்முறை தெரிவு செய்யப்பட்ட சாதனை மாணவிகளை கல்லூரி அதிபர் ம.சுந்தரராஜன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இச் சந்திப்பு நேற்று பாடசாலையில் நடைபெற்றது.

க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி 4 மாணவிகள் மருத்துவ துறைக்கும், ஒரு மாணவி பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டமை தெரிந்ததே.
மாணவிகளான லோகநாதன் புவித்ரா, சகாதேவராஜா டிவானுஜா, தங்கவடிவேல் டயானு ஆகியோர் 3 ஏ சித்திகளையும், ராஜேஸ்வரன் கம்ஷாயினி இரண்டு ஏ ஒரு பி சித்திகளையும் பெற்று மருத்துவத்துறைக்கும்,
ரஜிநாதன் துர்க்கா மூன்று ஏ சித்திகள் பெற்று பொறியியல் துறைக்கும் தெரிவாகியிருந்தார்கள்.
இந்த ஐந்து மாணவிகளை வரவழைத்து அளவளாவி பாராட்டு தெரிவித்தார் அதிபர். பாடசாலைக்கும் ,ஊருக்கும் பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் வெகுவிரைவில் பாராட்டு விழா நடாத்த திட்டமிட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :