பேராசிரியர் பாலசுகுமாரின் நூல் அறிமுக விழா!


பைஷல் இஸ்மாயில் -
மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் பாலசுகுமாரின் ஒன்பது நூல்களின் அறிமுக விழா நேற்று மாலை (25) திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் அறிமுக விழாவுக்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது சேனையூர் கலம்பகம், கரைகள் கடந்து, Eezha Natiyam, Inniyam & Music & Dance of Eazham Tamilians, கறுப்பி, கொடி எழு அன்னப்புரவி, தமிழ் மரபில் சிவாஜி, கணேசனின் நடிப்பு ஈழ நாட்டியம், ஓ தோழனே நந்தினி, நஞ்சுமிழும் காளான்கள் என்ற இந்த 9 நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது.

இந்த நூல்களின் அறிமுக உரையினை ஓய்வுபெற்ற அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான திருமலை நவம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற மாகாணப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி, திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் சி.ஸ்ரீதரன், எழுத்தாளர் கதிர் திருச்செல்வம், எழுத்தாளர் கு.யோகானந்தம், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் க.அன்பழகன், ஆசிரியர் தி.பவித்திரன், எழுத்தாளர் கொட்டியாரன் சிவசங்கரன் ஆகியோரினால் நிகழ்த்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :