ஐ.நா.வில் பொத்துவில் கனகர் கிராம பிரச்சனை வெடித்தது! ஐ.நா.வில் மனித உரிமை செயற்பாட்டாளர் கல்முனை கணேஷ் முழக்கம்!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்பாறை மாவட்டத்திலே பொத்துவில் பிரதேச நிர்வாக எல்லைக்குட்பட்ட கனகர் கிராமம் எனும் கிராமத்து மக்கள் கடந்த 1990 ம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்து வேறு கிராமங்களுக்கு தஞ்சம் புகுந்தனர் , ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை தங்களது சொந்த இருப்பிடம் செல்வதற்காக தொடர்ந்து 32 ஆண்டுகளாக போராடியும் இன்னும் பலனளிக்கவில்லை .இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
இவ்வாறு ஜெனீவாவில் ஐ.நா.பிரதான மாநாட்டு மண்டபத்தில் உரையாற்றிய மாணவர் மீட்பு பேரவை தலைவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பொறியியலாளர் கலாநிதி செல்வராசா கணேஷ் தெரிவித்தார்.

191 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசிய
அவர் மேலும் தெரிவிக்கையில்...

புத்தர் சிலைகளை நட்டு தமிழர்களின் நிலங்களை அபகரிப்பு செய்கின்றனர் , அத்தோடு நான் வாழ்கின்ற இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மாவட்டமாகிய அம்பாறை மாவட்டத்திலே பொத்துவில் பிரதேச நிர்வாக எல்லைக்குட்பட்ட கனகர் கிராமம் எனும் கிராமத்து மக்கள் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி காரணமாக கடந்த 1990 ம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்து வேறு கிராமங்களுக்கு தஞ்சம் புகுத்தனர் , ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை தங்களது சொந்த இருப்பிடம் செல்வதற்காக தொடர்ந்தும் 32 ஆண்டுகளாக போராடி வருகின்றனர் , இலங்கை அரசோ தொடர்ந்தும் அவர்களின் அடிப்படை உரிமையை வழங்காது தடுத்து வருகின்றனர் இதிலே ஏறத்தாழ 700 ஏக்கருக்கும் மேற்பட்ட 300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தாங்களின் வாழ்வாதாரம், பிள்ளைகளின் கல்வி, போன்றவற்றை பெற்றுக் கொள்ள மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்,

அத்தோடு இலங்கையின் கிழக்கேயுள்ள மட்டக்களப்பு எனும் மாவட்டத்தில் உள்ள , செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குப்பட்ட மயிலத்தமடு மாதவனை எனும் பிரதேசத்தில் தமிழ் மக்களால் தங்களது வாழ்வாதாரத்திற்கு என பயன்படுத்தப்படும் மேய்ச்சல் தரையினையை சிங்கள குடியேற்றம் செய்து வருகின்றனர் இதன் நிமித்தம் 400,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன, அத்தோடு இதே பிரதேச செயலக எல்லைக்குப்பட்ட கிராமத்தில் 1600 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை இராணுவம் அபகரித்துள்ளது,

அத்தோடு வெல்லாவெளி எனும் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கெவுளியாமடு எனும் கிராமத்தில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை இலங்கை அரசு அபகரித்துள்ளது, எனவே இனப் படுகொலையின் அங்கங்களாகவுள்ள இவ் பெளதீக வளங்கள் அபகரிப்பானது தொடர்ந்து செல்கின்றது எனவே மிக மோசமான இன அழிப்பை தமிழர்கள் மேல் இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.

வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவது குறித்து விசாரிக்க சிறப்பு அறிக்கையாளரை நியமிக்குமாறு ஐ.நா.வை வலியுறுத்துகிறோம். தமிழர்களுக்கு எதிராக குற்றங்களை இழைத்த போர்க்குற்றவாளிகளை அடையாளம் காண ஐ.நா.வை வலியுறுத்துகிறோம். அவர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யவும் வேண்டுகின்றோம், இறுதியாக உறுப்பு நாடுகள் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆம் அரசியல் தீர்வை வழங்க வேண்டும். சிங்கள அரசை தமிழர்கள் நம்ப மாட்டார்கள். எனவே சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும். என்றார்.

இவரது இரண்டு நிமிட ஆங்கில உரை பலரையும் கவர்ந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :