தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி சைசூன் நோட்டிங்ஹாம் செல்கிறார்!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் ஆங்கில மொழித்துறையில் கல்வி கற்று, முதற்தரத்தில் சித்தியடைந்த அப்துல் சலீம் சைசூன் என்ற மாணவி, பொதுநலவாய நாடுகளுக்கான உதவுதொகை பெற்று பிரித்தானியாவில் உள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பைத் தொடர்வதற்காக செல்கிறார்.

குறித்த மாணவியை வாழ்த்துவதுடன் அவரூடாக மற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் உரை ஒன்றை நிகழ்த்த வைத்த நிகழ்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் ஆங்கில மொழித்துறைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் ஆங்கில மொழித்துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அப்துல் சலீம் சைசூன் தனது கணவருடன் வருகைதந்திருந்தார்.

நிகழ்வின் ஏற்பாட்டாளரும் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ், தனது உரையின்போது குறித்த மாணவி தொடர்பான தனது புரிதல்களை இங்கு எடுத்துரைத்தார். இதன்போது சிரேஷ்ட விரிவுரையாளர்களான எம்.ஐ.எfப். கரீமா மற்றும் எம்.எம்.அப்துல் றஹ்மான் ஆகியோரும் மாணவி தொடர்பான தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

பின்னர் அப்துல் சலீம் சைசூன், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரை ஒன்றை நிகழ்த்தினார்.

மாணவி சைசூன் பட்டப் பின் படிப்பைத் தொடர்வதற்காக செல்லவுள்ள பிரித்தானியாவின் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் கலாநிதிப் பட்டத்தைப் பெறுவதற்கான கல்வியைத் கற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக குறித்த மாணவி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :