உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளியின் சிறுவர் தின நிகழ்வுகள் பணிப்பாளர் ஐ.எம்.உவைஸ் தலைமையில் இன்று (30)இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டத்தரணி எம்.பி.எம்.பௌஸான் கலந்து கொண்டார்.
பாடசாலையின் அதிபர் எம்.எப்.பர்ஸானா அவர்களின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கான கலை நிகழ்வுகள் மற்றும் சங்கீத கதிரை,பலூன் உடைத்தல்,முகத்தில் சித்திரம் தனி நிகழ்ச்சிகள் மற்றும் குழு நிகழ்ச்சிகள் என்பன் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
மேலும் இதன் போது சிறுவர் தின போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பிரதம அதிதியினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment