இறைவனின் கிருபையால் திருமண வீடொன்றுக்கு விரைவாக நிதியுதவி வழங்கப் பட்டது



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டுப் பள்ளிப் பகுதியில் வசித்து வரும் ஏழைக் குடும்பத்துப் பெண்ணொருவரின் திருமண ஏற்பாடுகள் எவ்வித வசதிகளும் அற்ற நிலையில் முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில் எமது SWDO அமைப்பினரிடம் நிலமையைச் சுட்டிக்காட்டி உதவிக்கான கோரிக்கையொன்று குறித்த மணப் பெண்ணின் குடும்பத்தினரால் முன் வைக்கப் பட்டிருந்தது.

எமது அமைப்பின் தெரிவுக் குழு உறுப்பினர்கள் அந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டு நிலமையை உறுதிப் படுத்திய பின்னர் எமது அமைப்பிற்கு உதவுகின்ற நல் லுங்களுக்கும் தனவந்தர்களுக்கு மேற்படி விடயம். உடனடியாகத் தெரிவிக்கப் பட்டது.

அதற்கிணங்க மாஷா அல்லாஹ், உதவும் நல்லுள்ளங்களான , Rice and Nootls நிருவனத்தில் பணி புரியும் எமது ஊர் சகோதரர்கள் ஊடாக 20,000/= ரூபாவும் எமது அமைப்பின் நிதிக்குழு விசேட ஆலோசகர்

குசைன் ஹாஜியார் மூலமாக 100,000/= ரூபாவும் மொத்தமாக 120,000/= ரூபாய் பணம் நிதியுதவியாக எமக்குக் கிடைக்கப் பெற்றது.

குறித்த உதவித் தொகையை குசைன் ஹாஜியார் தலைமையில் மணப் பெண்ணின் குடும்பத்தாரிடம் எமது SWDO அமைப்பு உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்கி வைத்தனர்.

இவ்வுதவியினை மனமுவந்து வழங்கிய நல்லுள்ளங்களின் ஈருலக ஈடேற்றம் மிகச் சிறப்பாய் அமைந்திட இறைவனிடம் நாம் பிரார்த்திக்கிறோம்.

இதேபோல் ஏழைகள் பலரின் தேவைகள் பல வேண்டுகோள்களாக எம்மிடம் முன்வைக்கப் பட்டுள்ளன. அவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை எங்களுடைய சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தின் (SWDO) ஊடாக வழங்க முன் வாருங்கள் சகோதரர்களே அல்லாஹ் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்.🤲🏻🤲🏻

SWDO - நிர்வாகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :