காலை ஆராதனையில் வருகைகூடிய மாணவர்கள் நட்சத்திர பதக்கம் வழங்கி கௌரவிப்பு.



காரைதீவு சகா-
ம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் முதலாவது தவணையின் மொத்த 59 பாடசாலை நாட்களில் 55 நாட்களுக்கு மேல் வருகை தந்த மாணவர்களுக்கு நட்சத்திர பதக்கம் வழங்கி பாராட்டப்பட்டது.

இவ் வைபவம் பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இன்று (22) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தரம் 1 முதல் தரம் 11வரையுள்ள 25 மாணவர்கள் அதிதிகளால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
நேற்றையதினம் பாடசாலைக்கு 5.30 மணிக்கு முந்தி வருகைதந்த குடியிருப்பு முறையைச் சேர்ந்த இரு மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி அமைச்சின் சமயம் மற்றும் விழுமியங்கள் சார் பிரிவின் பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.சுந்தரலிங்கம் கலந்து கொண்டு இவர்களை கௌரவித்தார்.

ஏனைய மாணவர்களின் முன்னிலையில் குறித்த சாதனை மாணவர்கள் நட்சத்திர பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
உதவி அதிபர் என்.வன்னியசிங்கம் தொகுத்தளித்த சிரேஸ்ட ஆசிரியர் ந.கோடீஸ்வரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :