கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஜ.நா.வில் முதல் தடவையாக முன்வைப்பு!



இலங்கை அரசு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணிக்கிறது.
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் காட்டம்.
வி.ரி.சகாதேவராஜா-
லங்கை அரசு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணிக்கிறது.
உதாரணமாக: அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம், கல்முனை வடக்குச் செயலகத்தில் உள்ள சிவில் நிர்வாகம், 3 தசாப்தங்களாக தமிழ்ச் சமூகங்களுக்குத் தீர்வின்றி, சமத்துவமின்மை மற்றும் முரண்பாடுகளை உருவாக்கியது. இந்தப் பிரச்சினைக்கு ஐ.நா.மாநாட்டில் பதிவு செய்கிறேன்.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் ஜெனீவா வில் இடம் பெற்ற 51 வது கூட்டத்தொடரில் ஒன்றரை நிமிட உரையின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்..

இலங்கை தொடர்பான ஆரம்ப தீர்மானம், 19/2 (2012 மார்ச்) மற்றும் 22/1 (2013 மார்ச்) இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.

எவ்வாறாயினும், 25/1 (2014 மார்ச்) தீர்மானத்தின் பின்னர், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது என தீர்மானம் மறுபெயரிடப்பட்டது.

முழு தீவின் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளாலும் இந்த சபையாலும் பேசப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால், இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறலானது சபைக்கு வெளியே இலங்கையில் அல்லது ஒரு ஓரத்தில் அது நடக்கக்கூடாது.
மேலும், இலங்கை அரசு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணிக்கிறது.
உதாரணமாக அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம், கல்முனை வடக்குச் செயலகத்தில் உள்ள சிவில் நிர்வாகம், 3 தசாப்தங்களாக தமிழ்ச் சமூகங்களுக்குத் தீர்வின்றி, சமத்துவமின்மை மற்றும் முரண்பாடுகளை உருவாக்கியது.
இந்தப் பிரச்சினையை ஐ.நா.மாநாட்டில் பதிவு செய்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தாயகத்தில் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை எதிர்கொள்கின்றனர். மனித உரிமைகள் பேரவையின் தீர்மான செயல்முறையானது சர்வதேச குற்றங்களின், குறிப்பாக இனப்படுகொலை குற்றங்களின் பொறுப்புக்கூறலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :