ஐநாவின் முதல் வரைவு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாகவே அமைகிறது! களத்தில் நின்று கல்முனை கணேஷ் காட்டம்.



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த பிரேரணையின் முதல்வரைபு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருக்கின்றது.

இவ்வாறு ஜெனீவாவில் இருக்கும் மாணவர் மீட்பு பேரவை தலைவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பொறியியலாளர் கலாநிதி செல்வராசா கணேஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐநா மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற பெரு நம்பிக்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு பரவலாக இருந்தது.
தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்கள் அநீதி பாரபட்சம் புறக்கணிப்பு போன்றவற்றிற்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்த வரைவு அமைந்திருப்பது கவலை அளிக்கின்றது.

தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதற்கு பதிலாக புதிதாக சமகால பொருளாதார நெருக்கடி பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது .அது மட்டுமல்ல அந்த நெருக்கடிக்கு யார் காரணம் அவரை கண்டறிந்து விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற ஒரு நல்ல விடயமும் சொல்லப்பட்டிருக்கின்றது .

போர்க்குற்றம் என்ற நிலை மாறி பொருளாதார நெருக்கடிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.

மேலும் அரசாங்கத்தால் அல்லது இராணுவத்தாலா மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை தனி நபர் குற்றமாக எடுத்துக்காட்ட முயற்சிக்கின்றார்கள். ஒட்டுமொத்த அரசாங்கம் அல்லது ராணுவம் செய்த படுகொலை போர்க்களத்துக்கு தனிநபர் அல்லது ஒரு ராணுவ வீரர்கள் வழக்கு தொடர முடியும் என்ற ரீதியிலே கூறுகிறது.

அந்த வரைபு என்பது ஒட்டுமொத்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அது இடம்பெற இல்லை.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் .அது தொடர்பாக சர்வதேசம் ஏற்றுக்கொள்கின்ற நாகரிகமான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
மேலும் அரசியல் சார்பற்ற நிறுவனங்களுக்கான கெடுபிடி குறிப்பிடப்பட்டிருக்கின்றது .

மேலும் உள்ளூரில் நிதி மோசடி செய்து வெளிநாடுகளில் அதனை பதுக்கி வைத்திருப்பவர்கள் சர்வதேச வங்கிகளில் வைத்திருப்பவர்கள் வங்கி கணக்குகளை முடக்கும் பரிந்துரை ஒரு முன்னேற்றகரமாக இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற பொழுது எம்மை வைத்து மேற்குலகம் இலங்கை அரசை கையாளுகின்றபோக்கு இது என் என்று எண்ணத் தோன்றுகின்றது .
எது எப்படி இருந்தாலும் நாங்கள் களத்தில் நின்று கூடுதலாக அழுத்தத்தை கொடுக்க இருக்கின்றோம். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :