துரித உணவு உற்பத்தித் திட்டத்தில் வீட்டுத் தோட்ட விதைகள் வழங்கல்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ரசாங்கத்தின் துரித உணவு உற்பத்தித் திட்டத்திற்கமைய கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் வீட்டுத் தோட்டம் மற்றும் சேனைப் பயிர் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டம்; இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை விவவாய விரிவாக்கல் பிரிவில் துரித உணவு உற்பத்தித் திட்டத்தின் மூலம் அல்மஜ்மா சேனைபயிர் செய்கையாளர்களுக்கு விதைப்பயிர்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அல் மஜ்மா சேனைபயிர் செய்கையாளர்கள் சங்க தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு வடக்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் இ.சுகந்ததாசன், விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன், விவசாய விரிவாக்கல் பிரிவில் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கும், சேனைப் பயிர் செய்கை அமைப்பதற்கு 270 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இவர்களின் நிலக்கடலை 87 நபருக்கும், கௌப்பி 100 நபருக்கும், சோளன் 92 நபருக்கும், பயறு 24 நபருக்கும், உழுந்து 78 நபருக்குமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :