கல்முனை கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பிரதேசங்களில் சேரும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பிரதேசத்தில் நாளுக்கு நாள் சேரும் குப்பைகளின் அளவு அதிகரித்து வருவதனால் கடற்கரை பள்ளிவாசலுக்கு வருவோரும் , வீதியினால் பயணிப்போரும், பிரதேச குடியிருப்பாளர்களும் , வெளியூரில் இருந்து கடற்கரை பிரதேசத்திற்கு வருகை தருவோரும் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

கடற்கரை வீதியினால் இரவில் பயணிக்கும் சிலர் வீட்டு கழிவுகளையும் மிருக கழிவுகளையும் கடற்கரை வீதியின் இரு மருங்கிலும் கடற்கரை ஓரத்திலும் வீசிவிட்டு செல்கின்றனர்.
இந்த குப்பைகளை பகல் வேளையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் மற்றும் காகங்கள் கிளறி பல இடங்களுக்கும் பரப்புவதனால் பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் சூழல் மாசடைவதுடன் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது.


எனவே இந்த விடயத்தை கவனத்திற் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :