'வரலாறு கூறும் நற்பிட்டிமுனை " நூல் வெளியீட்டு விழா.



வி.ரி சகாதேவராஜா-
ற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.சிவகுருநாதன் எழுதிய "வரலாறு கூறும் நற்பிட்டிமுனை" எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(18) மாலை நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்முனை வலய ஓய்வு நிலை கணிதபாட உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ். இலங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக ,அதிதிகள் மலர்மாலை அணிவித்து பாண்ட் வாத்தியத்துடன் வரவேற்று, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை என்பனஇடம் பெற்றன.

இவ் விழாவில் , நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் மற்றும் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தலைவர் தம்பிராஜா ரவிராஜ், சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் திருமதி. யோகேஸ்வரி இராமநாதன், மற்றும் ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி கே. துரைராஜசிங்கம்,கிராமிய தொழில் துறைத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்..
மேலும் , இவ் விழாவில் நற்பிட்டிமுனை ஆலய தலைவர்கள், அதன் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நூல் தொடர்பான மதிப்பீட்டு உரையினை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து வருகை தந்த அதிதிகளுக்கு நூல் பிரதிகளை நூலாசிரியர் எஸ். சிவகுருநாதன் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :