ராமகிருஷ்ண மிஷன் கல்லடி மாணவர் குருகுலத்தில் மாதாந்த ஐக்கிய வணக்கம் என்ற பௌர்ணமி தின சிறப்பு நிகழ்ச்சி இ.கி.மிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் முன்னிலையில்
நடைபெற்றது
கொழும்பு இ.கி.மிசன் தலைமையகத்தில் இருந்து விஜயம் செய்த சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ மகராஜ் சிறப்பாக பஜனை நடாத்தினார்.
தொடர்ந்து இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ,உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
இல்ல மாணவர்களின் ஓரங்க நாடகம் இல்லகீதம் என்பன பெற்றன.
தொடர்ந்து இல்ல மாணவர்களின் சிறப்பு பௌர்ணமி தின கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment