டைட்டன்ஸ் கழகத் தொடரில் டைட்டன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது...!



நூருள் ஹுதா உமர்-
ம்மாந்துறை டைட்டன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (2022.09.24,25) சம்மாந்துறை முகைடீன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மென்பந்துக் கிரிக்கட் தொடரின் சம்பியனாக டைட்டன்ஸ் அணி தெரிவானது.

பிராந்தியத்தில் காணக்கப்படுகின்ற பிரபலமான 32 கழகங்கள் இத் தொடரில் பங்குபற்றின. விறு விறுப்பாகச் சென்ற இத்தொடரில் பல பலட்பரீட்சைகளை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குள் சம்மாந்துறை டைட்டன்ஸ் அணியும், சம்மாந்துறை நியுசன் அணியும் நுழைந்தன.

இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டைட்டன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்தும் 26 என்ற வெற்றியிலக்கை நோக்கி கழமிறங்கிய நியுசன் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு தோல்வியடைந்தது.

இறுதியில் போட்டியில் அதிதிகளாக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான், சம்மாந்துறையின் சுலைமான் மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் பர்ஹார், டைட்டன்ஸ் கழகத்தின் செயலாளர் ரையிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :