ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்



பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி.

இன்று அரசாங்கம் தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளது.இந்த யோசனைக்கு கொள்கையளவில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த வகையில் அர்த்தப்படும் விதமாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் முன்வைத்த 21 ஆவது திருத்தம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த முன்மொழிவில், ஐக்கிய மக்கள் சக்தி ராஜ்யசபா(அரச பேரவை) என்ற வார்த்தையை முன்மொழிந்தது. ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 21 ஆவது திருத்தச் சட்டம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இது அரச பேரவை என்ற வார்த்தையுடன் சமர்ப்பிக்கப்பட்டது. இது நமது சமூகத்திலிருந்து முன்வைக்கப்பட்ட வேண்டுகோளாகும்.நேரடி ஜனநாயகத்திற்காக,வாக்களிப்புக்கு மட்டும் வரையறுத்த ஒன்றாக அமையாது மக்களையும் உள்ளடக்கிய ஜனநாயகம் வேண்டும் என்ற கோரிக்கையாக எழுந்தது. மக்கள் வீதிக்கு இறங்கினர். மக்களின் அந்த கோரிக்கையைத் தான் நாம் 21 ஆவது திருத்ததமாக சமர்ப்பித்தோம். நாங்கள் அதை முன்வைத்தோம், அரச பேரவையை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக நாங்கள் முன்வைத்தோம். ஆனால்,இந்த அரசாங்கம் இன்று என்ன முன்வைத்துள்ளது? சட்டபூர்வ தன்மை கொண்ட வேலைத்திட்டமாகவா இன்று சம்ர்ப்பிக்கப்பட்டுள்ளது? இது ஒரு கண்மூடிவித்தையாகவே நான் பார்க்கிறேன்.

வீதியில் இறங்கிய மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில்தான் ஐக்கிய மக்கள் சக்தி 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பிரேரணை முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்று அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணை என்ன?அத்தகைய சட்ட அதிகாரம் கொண்ட நிறுவனம் முன்மொழியப்பட்டுள்ளதா?.இது ஒரு கண்மூடி வித்தையாகவே இருப்பதை நான் காண்கிறேன், இது நல்லெண்ணத்துடன் செய்யப்படுள்ளதா என்பதில் எங்களுக்கு சிக்கல் உள்ளது. பாராளுமன்றக் குழுவின் பிரகாரம் அமைந்த தற்காலிக ஏற்பாடு மாத்திரமே.இது என்ன சொல்கிறது? அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக நிதி தொடர்பான குழுக்களை கூட்டி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முடியும்.குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பாக, பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை நிறைவு செய்வது குறித்து,குறுகிய மற்றும் நடுத்தர மற்றும் நீண்ட கால பொது குறைந்தபட்ச திட்டங்கள் தொடர்பான உடன்பாட்டை எட்டுவது தொடர்பாக, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏற்ற குறுகிய நடுத்தர உடன்பாட்டை எட்டுவதற்கு ஏற்ற அமைப்பாகவே நாம் முன்மொழிந்தோம்.ஆனால் இன்று அரசாங்கம் சமர்ப்பித்த தேசிய பேரவைக் கட்டமைப்பின் சட்ட பூர்வத்தன்மை யாது? இது ஒரு கண்மூடி வித்தையாகவை நான் பார்க்கிறேன்!இது நல்லெண்ணத்துடன் செய்யப்படுகிறதா என்பதுதான் பிரச்சினை. தேசிய பேரவையை ஸ்தாபித்தல் இது பாராளுமன்றக் தெரிவுக் குழுவின் பிரகாரமைந்த ஒரு தற்காலிக ஏற்பாடு மாத்திரமே.

என்ன ஒரு வேடிக்கையான விடயம் இது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தேவையான இணக்கப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. அது பாராளுமன்றத்தில் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. அன்று பசில் ராஜபக்சவுடன் நமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் கொண்டிருந்த கருத்தியல் ரீதியான வேறுபாட்டை ஓரு முறை சிந்தித்துப் பாருங்கள். இன்று எவ்வகையான போக்கை ஜனாதிபதியானதும் கையாள்கிறார்?.மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில்,நிதி தொடர்பான மரபுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றம் அறிந்திருக்க வேண்டும். அப்போதைய நிதியமைச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை.ஜனாதிபதியும் அன்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். இன்று என்ன நடக்கிறது?

நாட்டின் நிதி தொடர்பான இணக்கப்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிய நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது.ஆனால் இன்று என்ன நடக்கிறது? அதுபற்றி எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.பிரிட்டன் போன்ற நாடும்,அமெரிக்கா போன்ற நாடும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் முக்கியமான விடயங்களை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சிகளிடமும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக் குழுக்களிடமும் தெரிவிப்பது ஜனநாயக நாடுகளின் பாரம்பரியமாகும். இவ்வாறான ஒப்பந்தங்கள் எவ்வாறு எம்மை பாதிக்கின்றன என்பதை அறிய நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு.எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்.

மக்களை ஏமாற்றிய வன்னம் பழைய ஆட்சியின் நீட்சியை முன்னெடுக்கவே அரசு முயற்சிக்கிறது. இது வெறும் பாராளுமன்ற தெரிவுக்குழு மாத்திரமே,அதன் அமைப்பைப் பார்க்கும்போது, ​​நம்பகத்தன்மையை பார்க்கும் போது சிக்கல் உள்ளது. சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை.அதிகாரமற்ற அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் மூலம் ஆளும் தரப்பின் நோக்கமும் இத்தகைய உண்மைகளிலிருந்து தெளிவாகிறது.

பெயரளவில் இந்தத் திருத்தங்களை கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் என்ன எதிர்பார்க்கிறது? சர்வதேச அளவில் நமது நாடு தொடர்பான மதிப்பீடு சிறப்பாக அமையவில்லை. மூடி மறைக்கவா இந்த அரசாங்கம் முயல்கிறது. அவர்கள் நேர்மையாக இருந்தால்,உண்மை இருந்தால், ஒரு சட்ட ரீதியான அமைப்பாகவே இது நிறுவப்பட வேண்டும்.அதை விடுத்து,

உலகையும், நாட்டையும்,நாடாளுமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கிறோம்.

மக்களை ஏன் இவ்வாறு ஏமாற்றுகிறீர்கள்? இந்த தேவையற்ற சட்டபூர்வமற்ற குழுக்களில் எதிர்க்கட்சிகள் கூட அங்கம் வகிக்கிறது என கூறி எங்களுக்கு முத்திரை குத்தவே பார்க்கின்றனர். இந்த ஏமாற்று வித்தையில் நாம் விழ மாட்டோம். இந்த யோசனை நல்லது.ஆனால் அதிகாரம் கொண்ட ஒரு சட்ட நிறுவனம் நிறுவப்பட வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தச் சட்டத்தில் போன்ற அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஒரு சட்ட நிறுவனத்தை நிறுவுவது அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :