ஆயுதங்களுடன் இருவர் கைது



எச்.எம்.எம்.பர்ஸான்-
பொலன்னறுவை - அக்பர்புர, பங்குரான பகுதியிலுள்ள இரண்டு வீடுகளில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) அதிகாலை 4.40 மணியளவில் பொலன்னறுவை - புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது அயுதங்களுடன் 32 மற்றும் 47 வயதுகளுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீடுகளில் இருந்து 303 ரக துப்பாக்கி, 303 ரக மெகசீன், 7.62x51 ரவைகள், 7.6x39 ரவைகள், வாள்கள், இரும்பு சன்னங்கள், மோட்டார் சைக்கிள் செயின்கள், சொட்கன் துப்பாக்கி அதன் தோட்டாக்கள் போன்றவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :