போராட்டக் காரர்கள் மீதான அரசின் அடக்கு முறையை உடன் நிறுத்த வேண்டும்.



ஹஸ்பர்-
னநாயக ரீதியான மக்கள் போராட்டத்தின் மீது பயன்படுத்தப்படும் அரச எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (25) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு, பஞ்சம், ஊழல் மோசடிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்ற மக்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப் போராட்டக் காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, நீர்த் தாரைத் வீச்சு, கைதுகள், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தல், அதி உச்ச பாதுகாப்பு வலையப் பிரகடனம் என பல்வேறுபட்ட எதிர்ப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது.
அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் பொது மக்களது கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை போன்ற விடயங்களில் இருக்கும் உரிமையை மறுக்கின்ற கண்டிக்க தக்க செயற்பாடுகளாகும்.


எனவே இவ்வாறான ஜனநாயாக போராட்டங்கள் மீது நடாத்தப்படும் அரசியல் நோக்கங் கொண்ட மிலேச்சத் தனமான எதிர்ப்பு நடவடக்கைகளை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :