ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ்.நழீமின் அழைப்பை ஏற்று வருகைதந்த ராஜித சிறீ தமிந்த (பிரதி பொலிஸ்மா அதிபர்



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நழீமின் அழைப்பை ஏற்று பிரதி பொலிஸ்மா அதிபர் கிழக்குமாகாணம் இன்று ஏறாவூர் நகரசபைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இக்கலந்துரையாடலில் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானா (முன்னால் இராஜாங்க அமைச்சர்), ஏறாவூர் நகரசபை பிரதி தவிசாளர் ஏ.எஸ்.எம். றியாழ், எம்.எச்.எம். ஹமீம் (செயலாளர் ஏறாவூர் நகரசபை), சியாஹூல் ஹக் (உதவி பிரதேச செயலாளர் மண்முனை வடக்கு), எம்.எம். முகைதீன் அதிபர் (தலைவர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்) எம்.பி.எம்.ஏ. சக்கூர் (அதிபர் மட்/மம/அஹமட் பரீட் வித்தியாலயம்), மற்றும் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவ்விசேட கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் போதைவஸ்து பாவனைக்கு உட்படுதல், போதைவஸ்து வியாபாரிகள் பாடசாலை மாணவர்களை குறிவைத்து பயன்படுத்தும் விதம் தொடர்பாகவும், மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை, இரவு நேரங்களில் ஏற்படும் திருட்டுச் சம்பவம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :