தொழில் பயிற்சி அதிகாரசபை காரைதீவு பயிற்சி நிலையத்தினால் முன் கற்றல் அங்கீகாரம் (RPL) முறையினூடாக தேசிய தொழில் தகைமை தரம் 4 சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு காரைதீவுப் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது அதிகாரிகளினால் சான்றிதழை பெற தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறியை கற்று கொண்டிருப்பவர்கள் (6 மாதமாக), தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், வியாபாரத்தை பதிவு செய்து நேரடியாக தொழிலில் ஈடுபடுபவர், 11/2 வருட அனுபவம் தொடர்ச்சியாக இருப்பவர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு வாய்ப்பும், திறமையும் அதிகம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதே போன்று online மூலம் எப்படி விண்ணப்பிக்க முடியும், 7 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும் விடயம், போலிச் சான்றிதழ் எடுக்க முடியாத தன்மை, தனிநபருக்கு சான்றிதழ் எடுக்க முன்பு 25000 ரூபாய் செலவானது ஆனால் தற்போது ஜனாதிபதி நிதியத்தால் இலவசமாக வழங்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் விளக்கி திறமையுள்ளவர்கள் மாதக்கணக்கில் தொழிலை வருமானத்தை விட்டு 6 மாதங்கள் முழு நேர பயிற்சி பெற வேண்டியதில்லை 3 மணித்தியாலங்கள் மட்டும் பரீட்சைக்கு செலவிட்டால் போதும் போன்ற விடயங்கள் இந்த நிகழ்வில் எடுத்துக் காட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் உட்பட அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment