தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிக்குமாறு சிலோன் மீடியா போரம் கோரிக்கை!



நூருல் ஹுதா உமர்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் மற்றும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (09) வெள்ளிக்கிழமை உபவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிக்குமாறு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் கோரிக்கை விடுத்தார்.

இக்கற்கை நெறியினை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் ஆர்வமாக இருப்பதாக தன்னிடம் விரும்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே இக்கோரிக்கையினை முன்வைப்பதாக உபவேந்தரிடம் கலாநிதி றியாத் ஏ.மஜீத் சுட்டிக்காட்டினார்.

இதனையெடுத்து உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூவக்கர், சிலோன் மீடியா போரத்தின் இக்கோரிக்கையினை ஏற்று இன்னும் ஓரிரு வாரங்களில் இதழியல் கற்கை நெறிக்காக விண்ணப்பம்படிவங்கள் கோரப்படவுள்ளதாக உறுதியளித்தார். மேலும் அண்மையில் இதழியல் கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை பிரமாண்டமானதாக செய்தமைக்கு நன்றிகளை உபவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கலாநிதி றியாத் ஏ.மஜீத் இதன்போது தெரிவித்தார்.

தற்போது உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் தலைமையில் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகள் மற்றும் துறைசார் ஆலோசனைகள் குறித்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கலாநிதி றியாத் ஏ.மஜீத் உபவேந்தருக்கு தெரிவித்ததுடன் தங்களின் இவ்வாறான பணிகளுக்கு சிலோன் மீடியா போரம் பக்கபலமாக இருக்குமெனவும் தெரிவித்தார்.

மேலும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் பதவியேற்று ஒரு வருடப் பூர்த்தியை நினைவுகூர்ந்து நினைவுப் பரிசொன்றினை சிலோன் மீடியா போரத்தின் சார்பில் றியாத் ஏ.மஜீத் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :