பாடசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க நகை உரிய ஆசிரியையிடம் ஒப்படைப்பு




கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களது பாராட்டத்தக்க செயல்

அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 09 சீ பிரிவை சேர்ந்த மாணவர்களான என்.எம்.சப்ரின் , கே.கைப் சக்கி மற்றும் ஏ.எம்.எம்.அஸ்ஜத் ஆகிய மூன்று மாணவர்களும் சுமார் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் (2,80,000) ரூபாய் பெறுமதி மிக்க தங்க கைப்பட்டி ஒன்றை கண்டெடுத்த கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்த நிகழ்வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இத் தங்க கைப்பட்டியானது இக் கல்லூரி ஆசிரியை ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாணவர்களும் இது விடயமாக உரையாடி தரம் 09 பகுதித் தலைவர் எம்.எஸ்.ஏ.சிராஜ் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ் மாணவர்களது நன்நெறி மிக்க முன்மாதிரி நடத்தையினை கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டியதுடன் , பகுதி காலைக் கூட்டத்தில் குறித்த ஆசிரியையிடம் அந்த தங்க நகை ஒப்படைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :