ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலைக்கு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 90ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அமைப்பினால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 90ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அமைப்பிடம் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பாடசாலை நிருவாகத்தினால் பாடசாலையின் வகுப்பறை புனரமைப்பு செய்யப்படாமல் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை வகுப்பறையின் கீழ் தரையை புனரமைப்பு செய்ய சீமெந்து பக்கட்டுகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 90ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அமைப்பினால் உடனடியாக வகுப்பறையின் கீழ் தரையை புனரமைப்பு செய்ய இருபது சீமெந்து பக்கட்டுகளை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தனர்.
மாணவர்கள் அமைப்பின் தலைவர் சரீப் றபியூடீன் தலைமையில் சீமெந்து பக்கட்டுக்களை கையளிக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.எல்.அபூலஹசன், மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 90ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அமைப்பினல் வறிய நிலையில் காணப்படும் மக்களின் தேசைகளை கண்டறிந்து மின்சாரம் வழங்கல், குடிநீர் திட்டம் மேற்கொள்ளல், கல்வி நடவடிக்கைக்கு உதவி செய்தல் போன்ற வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக அமைப்பின் செயலாளர் அர்.எம்.புஹாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment