சாய்ந்துமருது பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை கிளையின் அனுசரணையுடன் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சவக்காரம், சலவைத்தூள், Hand Wash, Sanitaizer போன்ற உற்பத்தி பொருட்களை உயர்ந்த தரத்தில் உற்பத்தி செய்வதற்கான 03 நாள் பயிற்சி செயலமர்வு சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை கிளை முகாமையாளர் செல்வம் பிரசாந்த், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் ஐ.எம். நாசர், பிரதேச செயலக விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் யு.எம். முஸம்மில் ஆகியோரும் வளவாளராக வெளிக்கள ஒருங்கிணைப்பாளர் ஏ.டவலியு.எம்.ஜெமீர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment