இந்தியக் கலைஞா்கள் நடிகா்கள். ஆடகர்கள், பாடகா்கள் மற்றும் நடிகா் கிறிக்கட் குழு டிசம்பா் 08 - 10.11ஆம் திகதிகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் பல்வேறு பொழுது போக்கு நிகழ்வுகளை நாடாத்தத் திட்டமிட்டுள்ளனா். இந்த திட்டத்தின் நோக்கம் இலங்கையின் உல்லாசப் பிராயாணத்துறை மேலும் ஊக்குவிக்கும் முகமாகவே இத் திட்டம் தயாா்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மற்றும் மாலைதீவு,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து 10 ஆயிரக்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகளை இலங்கைக்கு உல்லாசத்துறையை கவரும் விடயத்தில் இப் பொழுது போக்குப் பொதி தயாா் படுத்தப்பட்டுள்ளது. என சுற்றுலத்துறை இராஜாங்க அமைச்சா் டயனா கமகே தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாடு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டேல் பாடசாலையில் நேற்று 23 ஞயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்ட தகலைத் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சிகளை தயாா் படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த - நடிகா்கள் தயாரிப்பாளா்களான ருத்ரா, விஜே சேதுபதி, பிரியங்கா டாணியல் அஸ்வின அசீஸ் அக்தாா் நவ்சாத், இலங்கைப் பாடகா்களும் கலந்து கொண்டு இவ் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்தனா்.
இந் நிறுவனத்தின் இந் நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் , இலங்கையிலும் 2 கிழமைகள் கொண்ட பொழுது போக்கு நிகழ்வாகத் தயாா் படுத்தப்பட்டளளது.
இதே போன்று டிசம்பா் 23ஆம் திகதி 80 நாடுகளின் உலக அழகு ராணிகள் இணைந்து இலங்கை வருகின்றனா். இத் திட்டடத்தினை மிகவும் சிரமப்பட்ட இலங்கைக்கு கொண்டு வந்ததாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சா் தெரிவித்தாா்.
மேலும் அவா் அங்கு கருத்து தெரிவிக்கையில்
சுற்றுலாத்துறை அமைச்சினால் இத் திட்டத்திற்காக எவ்வித சதமும் செலவுகளும் செய்யவில்லை. இந்தியாவில் உள்ள பொழுது போக்குக் கம்பனியே இலங்கை சுற்றலாத்துறையை ஊக்குவிப்பதற்காக முன் வந்து இந் நிகழ்வினை இலங்கைக்கு கொண்டு வந்துளாா். இதனால் இந்தியா, மற்றும் இந்தியா்கள் வெளிநாடுகளில் வாழ்பவா்கள் இந் நிகழ்வுக்கு டிக்கட்டினைப் பெற்று கண்டு கழிப்பாா் அத்துடன் இலங்கை உள்ளுர் நடிகைகள், சிங்களப் பாடகா்களும் கலந்து கொள்வாா்கள். எனவும் அமைச்சா் டயனா கமகே கருத்து தெரிவித்தா்
0 comments :
Post a Comment